எம்.மனோசித்ரா
நாட்டின் சில பிரதேசங்களில் நேற்று 4 முச்சக்கர வண்டிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. குருவிட்ட, எஹெலியகொட, களனி மற்றும் பல்லேகல ஆகிய பொலிஸ் பிரிவுகளிலேயே இவ்வாறு முச்சக்கர வண்டிகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சகர வண்டிகளை திட்டமிட்டு கொள்ளையிடும் பிரிவினரால் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே மோட்டார் சைக்கிள், முச்சகர வண்டிகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்துமாறு வலியுறுத்துகின்றோம்.
அதேபோன்று எவ்வித உறுதிப்படுத்தப்பட்ட ஆவணமும் அற்ற வாகனங்களை கொள்வனவு செய்பவர்கள், கொள்ளையடிக்கப்பட்டவற்றை கொள்வனவு செய்பவர்களாவே கருதப்படுவர்.
இவ்வாறான குழுக்களால் கொள்ளையடிக்கப்படுகின்ற வாகனங்கள் கொழும்பிலும் கொழும்பிற்கு வெளிப்புறத்திலுமுள்ள குறிப்பிட்ட சில இடங்களில் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
கொள்ளையடிக்கப்பட்டவை எனத் தெரிந்தும் அவர்கள் வாகனங்களை கொள்வனவு செய்வதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறான இடங்கள் தொடர்பில் பொலிஸார் சுற்றிவளைப்புக்களை ஆரம்பித்துள்ளனர் என்றார்.
No comments:
Post a Comment