வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், ரவைகள் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Monday, March 8, 2021

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், ரவைகள் மீட்பு

எம்.மனோசித்ரா

பன்னல மற்றும் ரத்கம ஆகிய பிரதேசங்களில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி ரவைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

பன்னல பிரதேசத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் வெளிநாட்டு துப்பாக்கி மற்றும் 3 துப்பாக்கி ரவைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

ரத்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பிலும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

துப்பாக்கிகள் தொடர்பான சுற்றிவளைப்புக்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இவை தொடர்பில் பொதுமக்களுக்கு தகவல்கள் கிடைத்தால் பொலிஸாருக்கு அறிவிக்க முடியும்.

துப்பாக்கிகள் அல்லது அவற்றை சட்ட விரோதமாக தம்வசம் வைத்திருப்பவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்க முடியும்.

1997 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு இவை தொடர்பான தகவல்களை வழங்க முடியும் என்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment