தம்மாவாச மகாநாயக்க தேரரின் இறுதிக் கிரியைகள் - நாளை துக்க தினம் - கொழும்பில் மச்சம், மாமிசம், மதுபான விற்பனைக்கு தடை - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 23, 2021

தம்மாவாச மகாநாயக்க தேரரின் இறுதிக் கிரியைகள் - நாளை துக்க தினம் - கொழும்பில் மச்சம், மாமிசம், மதுபான விற்பனைக்கு தடை

அமரத்துவமடைந்துள்ள இலங்கை அமரபுர பௌத்தமத பீடத்தின் மகாநாயக்க தேரர் வணக்கத்துக்குரிய கொட்டுகொட தம்மாவாச தேரரின் இறுதிக் கிரியைகள் நாளை (25) பூரண அரச மரியாதையுடன் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளன.

அதற்கமைய இறுதிக்கிரியைகள் இடம்பெறும் நகர எல்லைக்குள் துக்க தினமாக கொண்டு, நாளையதினம் (25) கொழும்பு மாவட்டத்தில் விலங்குகள் அறுக்கும் தொழுவங்கள், மச்சம், மாமிச விற்பனை நிலையங்கள், மதுபான சாலைகள், மதுபான விற்பனை நிலையங்கள் ஆகியவற்றை மூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில், இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்வைத்த குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மகாநாயக்க தேரரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக நேற்றைய தினமும் அரசியல் தலைவர்கள் மற்றும் பெருமளவிலான மக்களும் திரண்டிருந்தனர். 

மகாநாயக்க தேரர் தனது 88 வது வயதில் நேற்றுமுன்தினம் கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad