மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவைர்களாக வியழேந்திரன், சந்திரகாந்தன், நஸீர் அஹமட், சந்திரகுமார் ஆகியோர் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Monday, March 1, 2021

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவைர்களாக வியழேந்திரன், சந்திரகாந்தன், நஸீர் அஹமட், சந்திரகுமார் ஆகியோர் நியமனம்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கமைவாக அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பித்து முன்னெடுத்துச் செல்வதற்கான பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவர்களாக மக்கள் பிரதிநிதிகள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேசங்களுக்கான கூட்டங்களை தலைமை தாங்கி நடாத்துவதற்காக, மக்கள் பிரதிநிகளை தலைவர்களாகவும், மேலதிக தலைவர்களாகவும், உப தலைவர்களாகவும் ஜனாதிபதியினால் முறையாக நியமிக்கும் வரை இக்கூட்டங்களை நடாத்துவதற்காக பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலனியின் பிரதம மேலதிக செயலாளர் என்டன் பெரேராவினால் மக்கள் பிரதிநிதிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான கே. கருணாகரன் தெரிவித்தார்.

இதனடிப்படையில் ஏறாவூர் பற்று, மண்முனைப் பற்று, போரதீவுப்பற்று மற்றும் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவுகளுக்காக இரஜாங்க அமைச்சர் எஸ். வியழேந்திரனும், கோறளைப்பற்று வடக்கு, கோறளைப்பற்று, கோறளைப்பற்று தெற்கு, மண்முனை வடக்கு, மண்முனை தென்எருவில்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தனும், கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று மத்தி, ஏறாவூர் நகர் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்டும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர ஏறாவூர் பற்று, மண்முனை மேற்கு, மண்முனை தென்எருவில்பற்று, போரதீவு பற்று மற்றும் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலப் பிரிவுகளுக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு உபதலைவராக பரமேஸ்வரம் சந்திரகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment