தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி 16 அடி பாயும் - சசிகலாவை ஓரங்கட்டி விட்டு அ.தி.மு.கவுடன் பா.ஜ.க வியூகம் - News View

About Us

About Us

Breaking

Monday, March 1, 2021

தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி 16 அடி பாயும் - சசிகலாவை ஓரங்கட்டி விட்டு அ.தி.மு.கவுடன் பா.ஜ.க வியூகம்

தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி 16 அடி பாயும் என்பார்கள். அதுமாதிரித்தான் இருக்கிறது இந்திய அரசியலில் அ.தி.மு.க - பா.ஜ.க உறவு என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றார்கள்.

அ.தி.மு.க ஒன்று நினைத்து செய்தால், அதை விட அதிகமாக பாய்ந்து வேறு ஒரு மட்டத்தில் நின்று யோசிக்கிறார் அமித்ஷா. 

தமிழ் நாடு சட்ட சபைத் தேர்தல் களை கட்டி வருகிறது. இதனிடையே சசிகலா தரப்பும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. 

அநேகமாக 3ஆவது அணி அமைத்து போட்டியிட வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. 

அப்படி போட்டியிட்டால் தென் மாவட்டங்களில் வாக்குகள் விழக்கூடும். அதிலும் சாதிய வாக்குகள் பெருவாரியாக கைகொடுக்கும்.

அதேசமயம், இது அ.தி.மு.கவுக்கு சறுக்கலை தரக்கூடும். இந்த ஒரு விடயத்தை சுட்டிக் காட்டித்தான், 2 மாதங்களுக்கு முன்பு டி.டி.வி தினகரன் பா.ஜ.க தலைமையிடம் பேசியதாகத் தெரிகிறது. 

ஒருவேளை அ.தி.மு.க - அ.ம.மு.க இணைந்தால் தென்மண்டல வாக்குகளையும் சேர்த்து பெறக்கூடுமே என்று பா.ஜ.கவும் ஒரு கணக்கு போட்டது. கடைசியில் அந்த கணக்கு அப்படியே நின்று விட்டது.

இதற்குக் காரணம், முதல்வர் எடப்பாடி டெல்லி சென்ற போது நடந்த அந்த விவகாரம்தான். ‘அ.ம.மு.கவுடன் இணைந்து தேர்தலை சந்தியுங்கள்’ என்று அமித்ஷா தரப்பில் சொல்லப்பட்டதாம். அதற்கு முதல்வர், அ.ம.மு.க நிர்வாகிகளில் முக்கியமானவர்கள் எல்லாம் அ.தி.மு.க பக்கம் வந்து விட்டார்கள். அது போக, சசிகலா வருகையை கட்சிக்குள்ளும் யாரும் விரும்பவில்லை. அதனால் எந்த வழியிலும், நம்முடைய வெற்றி வாய்ப்பு தென் மாவட்டங்களில் பாதிக்காது. தென் மாவட்டங்களில் மட்டும் நாம் 78 தொகுதிகளில் வெற்றி பெற்று விடுவோம் என்றாராம். 

இதைக் கேட்ட அமித்ஷா பூரித்துப் போய், “அப்படியென்றால், அ.தி.மு.க சார்பில் நீங்கள் அங்கே நிறைய இடத்தில் போட்டியிடுங்கள். எங்கள் பா.ஜ.கவுக்கு கொங்கு மண்டலத்தில் அதிகமான ஆசனம் தாருங்கள்" என்றாராம்.

முதல்வர் டெல்லி போய் வந்து இத்தனை நாட்கள் ஆன பிறகு இந்த தகவல் எல்லாம் கசிந்து வந்து கொண்டிருக்கின்றன. 

அதேசமயம், கொங்கு மண்டலத்தின் பிரதான இடங்களை அ.தி.மு.கவிடம் நெருக்கி கேட்டு வருகிறது பா.ஜ.க. கொங்குவைதான் அ.தி.மு.க அதிகம் நம்பிக் கொண்டிருக்கிறது. அதே கொங்குவில் பா.ஜ.கவும் பங்கு கேட்டு வருவதால், யாருக்கு என்ன ஆசனம் என்று இனிமேல்தான் தெரிய வரும்.

No comments:

Post a Comment