சாய்ந்தமருது பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளன தலைவராக சி.எம்.எம்.சப்னாஸ் தெரிவு - News View

Breaking

Post Top Ad

Monday, March 22, 2021

சாய்ந்தமருது பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளன தலைவராக சி.எம்.எம்.சப்னாஸ் தெரிவு

நூருல் ஹுதா உமர்

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற சாய்ந்தமருது பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளன விசேட கூட்டம் சாய்ந்தமருது இளைஞர் தொழில் பயிற்சி நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றது. 

இதன்போது அண்மையில் பதவி வெற்றிடமான சாய்ந்தமருது பிரதேச சம்மேளன தலைவர் பதவிக்கு புதிய தலைவராக மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி முபாரக் அலி மற்றும் சாய்ந்தமருது இளைஞர் சேவை அதிகாரி எம்.டீ.எம். ஹாறூன் மற்றும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். றிஹான் முன்னிலையில் சபையோரினால் பிளையிங் கோர்ஸ் இளைஞர் கழக தலைவரும் குரு ஊடக வலையமைப்பின் நிகழ்ச்சி தயாரிப்பாளருமான சி.எம்.முஹம்மட் சப்னாஸ் தெரிவு செய்யப்பட்டார்.

இக்கூட்டத்தில் சாய்ந்தமருது பிரதேச சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் இளைஞர் கழகங்களின் தலைவர், செயலாளர் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad