சம்பிக்கவுக்கு எதிரான குற்றப்பத்திரம் வாசிப்பு - விபத்தில் படுகாயமடைந்திருந்தவர் முதன்முறையாக நீதிமன்றத்தில் ஆஜர் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 4, 2021

சம்பிக்கவுக்கு எதிரான குற்றப்பத்திரம் வாசிப்பு - விபத்தில் படுகாயமடைந்திருந்தவர் முதன்முறையாக நீதிமன்றத்தில் ஆஜர்

2016 ஆம் ஆண்டில் இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் வாசிக்கப்பட்டுள்ளது. 

பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவினால் செலுத்தப்பட்ட ஜீப் ரக வாகனம் சந்தீப் சம்பத் குணவர்தன என்ற இளைஞர் மீது மோதிவிட்டு தப்பிச் சென்றமை, போலி சாட்சியம் சோடித்தமை, சாட்சிகளை மறைத்தமை உள்ளிட்ட 16 குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் வலல்லேவின் முன்னிலையில் குற்றப்பத்திரம் வாசிக்கப்பட்டுள்ளது.

எனினும், பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை.

கொவிட் 19 தடுப்பூசியினை ஏற்றிக் கொள்வதற்காக இராணுவ வைத்தியசாலைக்கு செல்வதால் அவர், நீதிமன்றத்தில் ஆஜராகவில்லையென பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி நீதி மன்றத்தில் அறிவித்தார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்திருந்த சந்தீப் சம்பத் குணவர்தன நேற்று முதன்முறையாக நீதிமன்றத்தில் ஆஜராகிருந்தார்.

No comments:

Post a Comment