சபையில் சுற்றித்திரிந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் - இருக்கையில் அமரக்கூறிய சபாநாயகர் - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 24, 2021

சபையில் சுற்றித்திரிந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் - இருக்கையில் அமரக்கூறிய சபாநாயகர்

பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறும்போது உறுப்பினர்கள் சுற்றித் திரிவதை விடுத்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அமருமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.

நாடாளுமன்ற அமர்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு ஆரம்பமாகியபோது, சில உறுப்பினர்கள் சபையில் சுற்றி நடப்பதும் மற்றவர்களுடன் கலந்துரையாடுவதுமாக இருந்தனர். 

இந்த விடயம் தொடர்பாக பாராளுமன்ற அதிகாரிகளால் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அறிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து, அமர்வுகள் நடைபெறும்போது தனித்தனியே கலந்துரையாடலை நடத்த வேண்டாம் என்றும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமருமாறும் சபாநாயகர், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad