நாட்டின் பல பகுதிகளில் பாரிய இடி மின்னலுடன் மழை - எச்சரிக்கை விடுத்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 10, 2021

நாட்டின் பல பகுதிகளில் பாரிய இடி மின்னலுடன் மழை - எச்சரிக்கை விடுத்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் பல பகுதிகளில் பாரிய இடி மின்னலுடன் மழை பெய்யும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மாகாணங்களிலும் மன்னார், அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் மற்றும் இரவு வேளையில் இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஒரு சில இடங்களில் 75 மி.மீ இற்கும் அதிக பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். 

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இடி மின்னல் வேளைகளில் பொதுமக்கள் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

வெட்ட வெளியில் அல்லது மரத்தின் கீழ் நிற்க வேண்டாம். பாதுகாப்பான கட்டடங்கள் அல்லது மூடிய நிலையில் உள்ள வாகனங்களில் இருக்கவும்.

வயல்கள் தோட்டங்கள் விளையாட்டு மைதானங்கள் மற்றும் நீர் நிலைகள் போன்ற திறந்த இடங்களில் இருப்பதைத் தவிருங்கள்.

கம்பி இணைப்புடனான தொலைபேசிகள் மற்றும் மின் இணைப்பு ஏற்படுத்தப்பட்ட மின் உபகரணங்களை பயன்படுத்த வேண்டாம்.

துவிச்சக்கர வண்டி, உழவு இயந்திரம், படகு போன்ற திறந்த நிலையில் உள்ள வாகனங்களை பயன்படுத்த வேண்டாம்.

கடும் காற்றின் காரணமாக, மரங்கள் மற்றும் மின் கம்பிகள் அறுந்து வீழ்வதற்கு வாய்ப்புக் காணப்படுவதால் அது தொடர்பில் அவதானமாக இருங்கள்.

அவசர நிலையின் போது, குறித்த பிரதேசத்தின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரியின் உதவியை நாடுங்கள் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment