ரஷ்யாவில் 90 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை - பிரான்ஸில் 89 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 10, 2021

ரஷ்யாவில் 90 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை - பிரான்ஸில் 89 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை

ரஷ்யாவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 43.42 லட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் 3ஆம் இடத்திலும் உள்ளது. 

உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் ரஷ்யா தற்போது 4ஆவது இடத்திலும், பிரான்ஸ் 6ஆவது இடத்திலும் உள்ளது.

இந்நிலையில், ரஷ்யா நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 445 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 43.42 லட்சத்து 81 ஆயிரத்து 368 ஆக உள்ளது.

ஒரே நாளில் 336 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 89 ஆயிரத்து 809 ஆக உள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 39.32 லட்சத்தை கடந்துள்ளது.

இதேவேளை பிரான்ஸ் நாட்டில் மேலும் 23,302 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் மேலும் 23 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அங்கு வைரஸ் தாக்குதலுக்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 39 லட்சத்து 32 ஆயிரத்து 862 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 316 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 89 ஆயிரத்து 301 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவில் இருந்து சுமார் 2.67 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad