சுதந்திர கட்சியை பலவீனப்படுத்த முயற்சிப்பதாக குறிப்பிடுவது தவறானது, ஆணைக்குழு அறிக்கை குறித்து ஜனாதிபதியுடன் பேசுவோம் - அமைச்சர் பந்துல குணவர்தன - News View

About Us

About Us

Breaking

Monday, March 1, 2021

சுதந்திர கட்சியை பலவீனப்படுத்த முயற்சிப்பதாக குறிப்பிடுவது தவறானது, ஆணைக்குழு அறிக்கை குறித்து ஜனாதிபதியுடன் பேசுவோம் - அமைச்சர் பந்துல குணவர்தன

(இராஜதுரை ஹஷான்)

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து மாறுபட்ட நிலைப்பாடு தோற்றம் பெற்றுள்ளது. குண்டுத் தாக்குதலின் உண்மை காரணிகள் வெளிப்படுத்தப்படவில்லை. இவ்விடயம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்கவுள்ளோம். அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு சுதந்திர கட்சியை பலவீனப்படுத்த முயற்சிப்பதாக குறிப்பிடுவது தவறானது என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

மஹரகம பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்க கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்தில் முன்னிலைப்படுத்துவோம் என நாட்டு மக்களுக்ககு வாக்குறுதி வழங்கினோம்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஆணைக்குழு முழுமையற்ற அறிக்கையினை சமர்ப்பித்துள்ளது. ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் பலர் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பிலான அறிக்கை முழுமையற்றதாக உள்ளது என்பதை குறிப்பிட வேண்டும். இதில் எவ்வித பயனும் எத்தரப்பினருக்கும் கிடைக்கப் பெறாது. அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு அறிக்கை தயாரிக்கப்படவில்லை.

கிடைக்கப் பெற்ற ஆதாரங்களுக்கு அமைய அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. குறைபாடுகள் காணப்படுகின்றன. இவ்விடயம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்கவுள்ளோம்.

பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பலவீனப்படுத்தவும், அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவை பழிவாங்கவும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையினை பயன்படுத்தியுள்ளது என்று குறிப்பிடும் செய்தி முற்றிலும் தவறானதாகும்.

நல்லாட்சி அரசாங்கத்தில் தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டமையும், அதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்களையும், அவர்களுக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இதனை அரசியல் பழிவாங்கள் என குறிப்பிட முடியாது.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள குறைபாடுகளை திருத்திக் கொள்ள அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும். அறிக்கையை அடிப்படையாக கொண்டு எதிர்தரப்பினர் அரசாங்கத்தை பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்றார்.

No comments:

Post a Comment