49 கோடி ரூபா செலவு செய்தபோதும் யானை - மனித மோதல் குறையவில்லை - News View

About Us

About Us

Breaking

Saturday, March 27, 2021

49 கோடி ரூபா செலவு செய்தபோதும் யானை - மனித மோதல் குறையவில்லை

யானை - மனித மோதலை தவிர்ப்பதற்காக 2019 மற்றும் 2020ஆம் ஆண்டு காலப்பகுதியில் 49 கோடி ரூபா செலவு செய்யப்பட்டுள்ள போதும் யானை - மனித மோதல் குறையவில்லையென பாராளுமன்றத்தில் நடைபெற்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) புலப்பட்டது.

யானை - மனித மோதலைத் தவிர்ப்பதற்கு 2019ஆம் ஆண்டு மின்சார வேலிகளை அமைப்பதற்காக 275,447,639 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டில் 221,505,818 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. இத்தொகையைப் பயன்படுத்தி 4,756 கிலோ மீற்றர் தூரத்துக்கு மின்சார வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இருந்தபோதும் 2021ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் திகதி வரையில் இலங்கையில் யானை - மனித மோதல் காரணமாக 28 மனிதர்களும், 83 யானைகளும் உயிரிழந்திருப்பதாக இக்குழுவில் புலப்பட்டது.

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான, லசந்த அலகியவண்ண, தாசிறி ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தனாயக்க, மொஹமட் முஸம்மில், ஜகத் புஷ்பகுமார, பீ.வை.ஜீ. ரத்னசேகர, வைத்தியகலாநிதி உப்புல் கலப்பதி, கலாநிதி ஹரினி அமரசூரிய, வீரசுமன வீரசிங்க மற்றும் சுற்றுசுழல் அமைச்சின் செயலாளர் வைத்தியலாநிதி அனில் ஜாசிங்ஹ உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment