மரம் வெட்டிய பிரதேச சபை உறுப்பினர் கைதாகி பிணையில் விடுதலை - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 23, 2021

மரம் வெட்டிய பிரதேச சபை உறுப்பினர் கைதாகி பிணையில் விடுதலை

(எம்.மனோசித்ரா)

பத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திம்பில்ல வனப் பகுதியில் காடழிப்பில் மற்றும் மரக் குற்றிகளை வெட்டியமை தொடர்பில் 33 வயதுடைய பத்தேகம பிரதேச சபை உறுப்பினரொருவர் திங்களன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கைது செய்யப்பட்ட குறித்த பிரதேச சபை உறுப்பினர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பத்தேகம பொலிஸாரால் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பிட்ட சில நபர்களால் இல்லாத அதிகாரங்களைப் பயன்படுத்தி வனங்களுக்கருகிலுள்ள பகுதிகளை வெவ்வேறு நபர்களுக்கு வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளன.

பொலிஸார் இது தொடர்பிலும் கண்காணிப்புக்களை முன்னெடுத்து வருகின்றனர். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad