மும்பை வைத்தியசாலையில் தீ விபத்து - கொரோனா நோயாளிகள் இருவர் பலி - 23 தீயணைப்பு வாகனங்கள் களத்தில் - News View

Breaking

Post Top Ad

Thursday, March 25, 2021

மும்பை வைத்தியசாலையில் தீ விபத்து - கொரோனா நோயாளிகள் இருவர் பலி - 23 தீயணைப்பு வாகனங்கள் களத்தில்

மும்பையின் பாண்டப் பகுதியில் உள்ள ஒரு மாலில் அமைந்துள்ள கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் வைத்தியசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் குறித்த மாலில் மீட்புப் பணிகள் இன்னும் நடைபெற்று வருவதாகவும், 23 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தில் உள்ளதாகவும் கூறியுள்ளது.

தீ விபத்தில் இரண்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் கொவிட் நோயாளர்கள் பராமரிப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 76 நோயாளிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் தீப்பரவல் ஆரம்பித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து பேசிய மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர், "நான் ஒரு மாலில் ஒரு வைத்தியசாலையில் பார்த்தது இதுவே முதல் முறை. இது மிகவும் கடுமையான நிலைமை. ஏழு நோயாளிகள் வென்டிலேட்டர்களில் இருந்தனர். 70 நோயாளிகள் வேறு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணை நடத்தப்படும்" என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad