ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஐவர் தொடர்பில் விசாரணை செய்யுமாறு உத்தரவு - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 10, 2021

ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஐவர் தொடர்பில் விசாரணை செய்யுமாறு உத்தரவு

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஐவர் தொடர்பில் விசாரணை செய்யுமாறு, பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

அபூ ஹிந்த், லுக்மான் தாலிப், அபூ அப்துல்லாஹ், றிம்சான், சாரா ஜெஸ்மின் ஆகியோர் தொடர்பிலேயே இவ்வாறு விசாரணைகளை முன்னெடுக்குமாறு சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக, சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இலங்கையைச் சேர்ந்த மொஹமட் நெளபர், மொஹமட் அன்வர் மொஹமட் றிஸ்கான், அஹமட் மில்ஹான் ஹயாத்து மொஹமட் ஆகிய இலங்கையைச் சேர்ந்த மூவருக்கு எதிராக அமெரிக்க நீதி திணைக்களம் (Department of Justice) பயங்கரவாத குற்றச்சாட்டு அறிவிப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad