குவைத்திலிருந்து 112 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 24, 2021

குவைத்திலிருந்து 112 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 112 இலங்கையர்கள் இன்று காலை சிறப்பு விமானத்தின் மூலமாக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

குவைத்திலிருந்து ஜசீரா ஏயர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஜே.என் -551 என்ற விமானத்னூடாக இன்று அதிகாலை 2.40 மணியளவில் இவர்கள் நாட்டை வந்தடைந்தனர்.

இவர்கள் குவைத்தின் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறியமைக்காகவே அந்நாட்டு பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர்.

சந்தேக நபர்கள் விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணைக்குட்படுத்தப்பட்டு, அவர்களிடமிருந்து அறிக்கைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நடவடிக்கைகளுக்கு பின்னர் அவர்களை தனிமைப்படுத்தலுக்காக இலங்கை இராணுவத்தினர் அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment