வவுனியாவில் மூன்று பொலிஸாருக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Saturday, February 6, 2021

வவுனியாவில் மூன்று பொலிஸாருக்கு கொரோனா

வவுனியா பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

வவுனியா பயங்கரவாத தடுப்புப் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என 20 ற்கும் மேற்ப்பட்டோருக்கு கொரோனா தொற்றிருக்கின்றமை அண்மையில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து வவுனியாவில் கடமையாற்றும் பல பொலிஸ் உத்தியோகத்தர்களிற்கு பி.சி.ஆர் மாதிரிகள் பெறப்பட்டிருந்தது. அவை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (06.02.2021) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அவர்களில் மேலும் 03 பேருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad