கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார் இந்தியப் பிரதமர் மோடி - News View

About Us

About Us

Breaking

Sunday, February 28, 2021

கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார் இந்தியப் பிரதமர் மோடி

டெல்லியின் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16ம் திகதி முதல் தொடங்கியது. முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை பிரதமர் மோடி செலுத்திக் கொண்டார். பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசிக்கான முதல் கட்ட தடுப்பூசியை இன்று எடுத்துக் கொண்டார்.

தகுதியான அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள முன்வர வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அனைவரும் ஒன்றிணைந்து கொரோனா இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவோம் என்று பிரதமர் மோடி கூறினார்.

No comments:

Post a Comment