மருதானை டீன்ஸ் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் தீப்பிடிப்பு - News View

Breaking

Post Top Ad

Monday, February 15, 2021

மருதானை டீன்ஸ் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் தீப்பிடிப்பு

மருதானை டீன்ஸ் வீதியில், சுகாதார அமைச்சுக்கு முன்பாக வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரொன்று திடீரென தீப்பிடித்துள்ளது.

இன்று (15) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தீயணைப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உடனே செயற்பட்ட தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இவ்விபத்தில் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad