சைக்கிளில் பயணித்தவர் மயங்கி விழுந்து மரணம் - யாழில் சம்பவம் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 20, 2021

சைக்கிளில் பயணித்தவர் மயங்கி விழுந்து மரணம் - யாழில் சம்பவம்

யாழ் நல்லூர் கோவில் வீதியில் கொழும்புத்துறையில் இருந்து திருநெல்வேலி சந்தைக்கு மரக்கறி வாங்க சென்ற 75 வயதுடைய முதியவர் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை மயக்கமடைந்த நிலையில் நிலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 75 வயதுடைய நபரே இவ்வாறு வீதியில் மிதி வண்டியில் பயணித்த போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

உயிரிழந்தவர் மாரடைப்பினால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் மரக்கறி கடை நடத்துபவர் என தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை வீட்டில் இருந்து மரக்கறி வாங்க திருநெல்வேலி பொதுச் சந்தைக்கு சைக்கிளில் சென்றதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment