மியன்மார் இராணுவத்தினரின் செயற்பாடுகள் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது - ஆங் சான் சூகியின் சிறைப்பிடிப்பை கண்டிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி - News View

About Us

About Us

Breaking

Monday, February 1, 2021

மியன்மார் இராணுவத்தினரின் செயற்பாடுகள் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது - ஆங் சான் சூகியின் சிறைப்பிடிப்பை கண்டிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி

மியன்மார் தேசிய ஜனநாயக லீக் கட்சித் தலைவர் ஆங் சான் சூகி, அந்நாட்டு இராணுவத்தினால் சிறைப் பிடிக்கப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமைக்கு ஐக்கிய தேசியக் கட்சி கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

மியன்மாருக்கு ஜனநாயகம் கொண்டு வருவதற்கான போராட்டத்தில் 15 ஆண்டுகள் வீட்டுக் காவலில் இருந்த தேசிய ஜனநாயக லீக் கட்சித் தலைவரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி, இராணுவத்தினரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியினால் இன்றையதினம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது மியன்மாரில் இன்று காலை இடம்பெற்ற இராணுவ சதித்திட்டத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம். மியன்மாரில் 2011 ஆம் ஆண்டிலிருந்து ஜனநாயக சீர்திருத்தங்கள் ஆரம்பமானதுடன், இராணுவ ஆட்சியின் பின்னர் 2015 ஆம் ஆண்டில் முதன்முறையாகத் தேர்தல் நடத்தப்பட்டது.

எனினும் இராணுவத்தினரின் நடவடிக்கைகள் மியன்மாரில் இடம்பெற்ற முன்னேற்றகரமான செயற்பாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்தன.

தேர்தலின் ஊடாகத் தெரிவு செய்யப்பட்ட அரச நிர்வாகம் பொறுப்பேற்றுக் கொண்டமை மியன்மாரில் ஜனநாயக ரீதியில் இடம்பெற்ற மிக முக்கிய முன்னேற்றமாக அமைந்தது. 

எனவே மியன்மாரின் பாராளுமன்றத்திற்கு ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டவர்களைக் கைது செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை உடனடியாக வாபஸ் பெறுமாறு மியன்மார் இராணுவத்தை வலியுறுத்துகின்றோம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment