முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதி வழக்கப்படும் - வாக்குறுதியளித்தார் பிரதமர் மஹிந்த - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 10, 2021

முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதி வழக்கப்படும் - வாக்குறுதியளித்தார் பிரதமர் மஹிந்த

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

கொவிட்-19 வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதி வழக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை பிரதமர் இடத்திலான கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி கொவிட்-19 வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்வது குறித்த கேள்வி ஒன்றினை எழுப்பினார்.

நீரில் கொவிட்-19 வைரஸ் தொற்றாது என அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே சபையில் நேற்று தெரிவித்திருந்தார். அப்படியென்றால் இப்போதாவாது எமது முஸ்லிகளின் உடல்களை நல்லடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதி வழங்குமா என பிரதமர் சபைக்கு அறிவிக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் சபையில் இருந்த பிரதமர், மரிக்கார் எம்.பியின் கேள்விக்கு, முஸ்லிம் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்குவோம் என்றார்.

இதன் பின்னர் கேள்வி நேரத்தில் கருத்து தெரிவித்த மரிக்கார் எம்.பி, விஞ்ஞான காரணிகளுக்கு அமைய கொவிட்-19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்கியமைக்காக பிரதமருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment