இலங்கையில் பயன்பாட்டிலுள்ள சில இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இணையத்தள முகவரியில் இறுதியில் .lk என முடிவடையும் சில இணையத்தளங்களே இவ்வாறு சைபர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக தொலைத் தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
இவ்வாறு சைபர் தாக்குதலுக்குள்ளாகியுள்ள இணையத்தளங்களை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக குறித்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓசத சேனாநாயக்க தெரிவிக்கின்றார்.
அத்தோடு மேலதிக விபரங்களை அறிய 011 4216061 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment