ரஞ்சனின் எம்.பி. பதவி தொடர்பிலான தீர்மானத்தை இடைநிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு - News View

Breaking

Post Top Ad

Friday, February 5, 2021

ரஞ்சனின் எம்.பி. பதவி தொடர்பிலான தீர்மானத்தை இடைநிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

ரஞ்சன் ராமநாயக்கவின் எம்.பி. பதவி தொடர்பிலான தீர்மானத்தை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

எதிர்வரும் 12 ஆம் திகதி வரை அது தொடர்பான எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாமென, மேன்முறையீட்டு நீதிமன்றம் பாராளுமன்ற பொதுச் செயலாளருக்கு குறித்த உத்தரவை வழங்கியுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக, சட்டமா அதிபர் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவித்திருந்தார்.

இந்நிலையில், தனது எம்.பி. பதவியை வெற்றிடமாவது தொடர்பில் தேர்தல்கள் செயலத்திற்கு பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவிப்பதை தடுக்குமாறு கோரி ரஞ்சன் ராமநாயக்கவினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதற்கமையவே மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் தனக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையை மீளாய்வு செய்யுமாறு ரஞ்சன் ராமநாயக்க மற்றுமொரு ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad