எமது பயணத்தினை தடுக்கவே வீதிகளில் ஆணிகள் வைக்கப்பட்டன - சாணக்கியன் - News View

Breaking

Post Top Ad

Friday, February 5, 2021

எமது பயணத்தினை தடுக்கவே வீதிகளில் ஆணிகள் வைக்கப்பட்டன - சாணக்கியன்

எமது பேரணியினை தடுக்கவே வீதிகளில் ஆணிகள் வைக்கப்பட்டன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நடைபெறுகின்ற பேரணியின் மூன்றாவது நாள் இன்று (05) திருகோணமலையில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில் பேரணி பயணிக்கும் வீதிகளில் ஆணிகள் எறியப்பட்டு, பேரணியில் பங்கேற்ற வாகனங்களின் டயர்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக சிவில் சமூக பிரதிநிதிகள் பயணித்த வாகனம் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பயணித்த வாகனம், மேலும் சில வாகனங்களின் டயர்களே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பேரணி வரும் வீதிகளில் ஆணிகளை வைத்து பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியை தடுத்து நிறுத்தும் மிக மோசமான முயற்சிகள் இன்று இடம்பெற்றுள்ளது இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

“இதனை யார் செய்தார்களோ தெரியாது. நாங்கள் உங்களை அடிக்க வரவில்லை. குழப்பம் செய்ய வரவில்லை. நியாயம் கேட்டே செல்கிறோம்.“ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad