ஆங் சான் சூகியின் கட்சி அலுவலகம் இராணுவத்தினரால் சேதப்படுத்தப்பட்டது - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 10, 2021

ஆங் சான் சூகியின் கட்சி அலுவலகம் இராணுவத்தினரால் சேதப்படுத்தப்பட்டது

ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் அலுவலகத்தை மியன்மார் இராணுவம் சோதனை செய்து சேதப்படுத்தியுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

மியன்மார் நாட்டில் நவம்பர் மாதம் நடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் புதிய பாராளுமன்றம் கடந்த 1 ஆம் திகதி கூட இருந்த நிலையில், அதிரடியாக இராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறிய இராணுவம், ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டு அதிகாரத்தை கைப்பற்றியது.

இந்நிலையில், அந்நாட்டின் தலைவரான ஆங் சாங் சூகி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

அவர்களை விடுதலை செய்யக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இராணுவத்தினர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைமை அலுவலகத்தை சோதனை செய்து சேதப்படுத்தியுள்ளார்கள் என அக்கட்சி தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad