எதிர்க்கட்சி அரசியல்வாதிகளில் முன்னணியில் இருப்பவர்களின் பிரஜா உரிமையை இல்லாமல் செய்து ஏகாதிபத்தியதுக்கான வழி அமைப்பதே அரசாங்கத்தின் திட்டம் - முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய - News View

About Us

About Us

Breaking

Friday, February 5, 2021

எதிர்க்கட்சி அரசியல்வாதிகளில் முன்னணியில் இருப்பவர்களின் பிரஜா உரிமையை இல்லாமல் செய்து ஏகாதிபத்தியதுக்கான வழி அமைப்பதே அரசாங்கத்தின் திட்டம் - முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய

(எம்.ஆர்.எம்.வசீம்)

அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய அடுத்த தேர்தலுக்கு முன்னர் எதிர்க்கட்சி அரசியில்வாதிகளில் முன்னணியில் இருப்பவர்களின் பிரஜா உரிமையை இல்லாமல் செய்து ஏகாதிபத்தியதுக்கான வழி அமைப்பதே அரசாங்கத்தின் திட்டமாகும். அத்துடன் முறைப்பாட்டாளர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருப்பதானது, பிரபல்யமாக பேசப்படும் கெகில்லே மன்னரது ஆட்சியில் கூட பதிவானதில்லை என முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரை தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எந்தவொரு நாட்டினதும் கடந்த காலத்தை பார்க்கும்போது அதிகமான தவறுகள் இடம்பெற்றிருக்கும். என்றாலும் நாடொன்றின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டுமாக இருந்தால், அவ்வாறான தவறுகளின் மூலம் படிப்பினை பெற்று, அதன் தவறுகள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

நாடு என்ற வகையில் கடந்த காலத்தில் மேற்கொண்ட தவறு என்பதை அறிந்து கொண்டே, அதன் பிரதிபலன்கள் எமது கண் முன்னே இடம்பெறுவதை கண்டிருந்தும், அதனை மீண்டும் யாராவது செய்ய முயற்சிக்குமானால், அது அறிந்து கொண்டே தேசத்துக்கு செய்யும் பாரிய குற்றமாகும். 

1978 இல் விசேட ஜனாதிபதி ஆணைக்குழு அமைத்து சிறிமாவோ பண்டாரநாயக்கவின் பிரஜா உரிமையை இல்லாமலாக்குவதற்கு, ஆறில் மூன்று அதிகாரம் இருந்த ஜேஆர், ஜயவர்த்தன அரசாங்கம் தயாரானது. அப்போது இந்த செயற்பாட்டை பாராளுமன்றம் அனுமதித்தாலும் சமூகத்தில் பல குழுக்கள் அதனை அனுமதிக்கவில்லை என்பது எமக்கு ஞாபகத்தில் இருக்கின்றது. 

அரசாங்கத்துக்குள்ளேயே அதற்கு எதிரான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. என்றாலும் 40 வருடங்களுக்கு பின்னர் இன்று போன்ற காலத்தில் அவ்வாறான ஜனநாயக விரோத முயற்சிகளை மீண்டும் காணாமல் இருப்பதற்கு நாங்கள் எண்ணம் கொள்ளவோம். 

அரசியல் பழிவாங்கல் அற்ற, தூய்மையான ஆட்சி ஒன்றுக்காக ஆணை பெற்றுக் கொண்ட ஆளும் அரசாங்கம், இவ்வாறான செயற்பாட்டின்பால் செல்லும் என இந்த அரசாங்கத்தை அதிகாரத்துக்கு கொண்டுவந்த யாரும் நினைத்திருக்காது. நாங்களும் நினைக்கவில்லை. என்றாலும் பாரிய விளைவுகளுக்கு வழிவகுக்கும் அந்த மோசமான தருணம் தோன்றுவதனை தற்போது காணக்கூடியதாக இருக்கின்றது. 

அரசாங்கத்துக்கு நெருக்கமான பல புத்திஜீவிகளின் அமைப்புகள் மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தது, ஜனநாயக முன்மாதிரியான ஆட்சியொன்றாகும். அதற்காகவே கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது 69 இலட்சம் பேர் வாக்களித்திருந்தார்கள். என்றாலும் தற்போது அந்த மக்களின் எதிர்பார்ப்புகள் வீணாகி இருக்கின்றன.

மேலும் இந்த அரசாங்கத்தின் நோக்கம் தற்போது எங்களுக்கு தெளிவாக காண்கின்றது. அவர்களுக்கு தேவையாக இருப்பது, அடுத்த தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளில் தெரிவு செய்யப்பட்ட முன்னணி உறுப்பினர்கள் சிலரது பிரஜா உரிமையை இல்லாமலாக்கி, ஏகாதிபத்தியத்துக்கு வழி அமைப்பதாகும்.

கடந்த வாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை சமூகமயப்படுத்தப்பட்டிருக்கும் அறிவிப்புக்களுக்கமைய, அந்த அறிக்கையானது நீதிமன்றத்துக்கு செய்யும் அவமானமாகும் என்பதே அதிகமான சட்டத்துறை சார்ந்த நிபுணர்களின் நிலைப்பாடாகும். 

ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மூலம் இந்த நாட்டில் முன்னணி அரசியல்வாதிகள் உட்பட கடமைகளை நேர்மையாக மேற்கொண்ட சில அரச அதிகாரிகளை அழித்து விடும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதை எம்மால் தெளிவாக காணக்கூடியதாக இருக்கின்றது.

மேலும் இந்த ஆணைக்குழு வழங்கியிருக்கும் பரிந்துரைகள் மக்கள் மத்தியில் நகைச்சுவையாகி இருக்கின்றன. அதில் சில பரிந்துரைகளில், நீதிமன்றங்களில் தற்போது விசாரிக்கப்பட்டு வரும் பல வழக்குகளின் குற்றவாாளிகளை விடுவித்து விடுதலை செய்வதற்கு பரிந்துரை செய்து, முறைப்பாட்டாளர்களுக்கு தண்டனை வழங்குவதற்கும் பிரேரித்திருக்கின்றது. 

பிரால்லியமானவர் என தெரிவிக்கப்படும் கெகில்லே மன்னர் கூட இவ்வாறாதொன்றை செய்திருப்பார் என நினைத்துப் பார்க்க முடியாது. என்றாலும் இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஊடாக 22 குற்றவாளிகளை பெயரிட்டு 79 வழக்குகளையும் தள்ளுபடி செய்யுமாறு பரிந்துரை செய்திருக்கின்றது.

மேலும் ஆணைக்குழுவின் அறிக்கைக்கமைய, குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கும் முறைப்பாட்டாளர்களை தண்டிப்பதற்கும் பரிந்துரைக்கப்படும் அதிகமான வழக்குகளை அந்தந்த நீதிமன்றங்களுக்கு சாட்டுவதற்கு ஆலாேசனை வழங்கியிருப்பது அரசாங்கத்தின் சட்டமா அதிபராலாகும்.

No comments:

Post a Comment