ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் ட்விற்றரில் இலங்கை குறித்து வெளியிட்ட பதிவில் யுத்த காலத்தில் இடம்பெற்ற காட்சிகளின் வீடியோவையும் இணைத்து பதிவு செய்தமைக்கு இலங்கை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இலங்கை கடந்த கால மனித உரிமை மீறல்களிற்கு தீர்வை காணத் தவறியதன் காரணமாக மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறும் ஆபத்து அதிகரித்துள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் ட்விற்றர் செய்தியொன்றில் தெரிவித்துள்ளதுடன் யுத்தகாலத்தில் எடுக்கப்பட்ட வீடியோவொன்றையும் பதிவுசெய்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் இந்த நடவடிக்கைக்கு ட்விற்றர் மூலம் கடும் ஆட்சேபனையை வெளியிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இந்த ட்விற்றர் பதிவு இது தொடர்பில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறையிலிருந்து முற்றிலும் விலகிச் செல்லும் ஒரு நடவடிக்கை என குறிப்பிட்டுள்ள தினேஸ் குணவர்த்தன, இது முற்றிலும் பக்கச்சார்பானது எனவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment