விசாரணைக்காக தோண்டி எடுக்கப்பட்ட சிசுவின் ஜனாஸா மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Saturday, February 20, 2021

விசாரணைக்காக தோண்டி எடுக்கப்பட்ட சிசுவின் ஜனாஸா மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு பூநொச்சிமுனையில் இம்மாதம் 08ஆம் திகதி உடற்கூராய்வுப் பரிசோதனைக்காக நீதிமன்ற உத்தரவின் பேரில் தோண்டி எடுக்கப்பட்ட சிசுவின் சடலம் (ஜனாஸா) மீண்டும் நீதிமன்ற கட்டளையின் அடிப்படையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வியாழக்கிழமை (18.02.2021) மீண்டும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

பூநொச்சிமுனையில் வசிக்கும் 26 வயது பெண்ணொருவர் கடந்த 2ஆம் திகதி சிசுவை தகது வீட்டில் பிரசுவித்த நிலையில் அந்த சிசு இறந்துள்ளதாக தெரிவித்து மையவாடியில் அடக்கம் செய்தது சந்தேகத்தினடிப்படையில் அமைந்தது எனக்கூறி காத்தான்குடி பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தொடுத்ததையடுத்து அடக்கம் செய்யப்பட்ட சிசுவின் சடலம் நீதிவான் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உடற்கூராய்வுப் பரிசோதனையும் செய்யப்பட்டது.

இந்நிலையிலேயே, சிசுவின் சடலம் மீண்டும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு நலலடக்கம் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment