இன்று தற்கால அரசாங்கத்தின் மூலம் கிராமங்களுக்கு நாட்டுக்கு இனங்காணக்கூடிய பாரியளவான அபிவிருத்தித் திட்டங்கள் ஜனாதிபதி தனது சொந்த சக்தியால் அன்றி எல்லாக் கட்சிகளையும் கேட்டு நாட்டின் அனைத்து குடிமக்களின் எதிர்காலத்தைப் பற்றியும் சிந்தித்துதான் முடிவுகளை எடுக்கின்றார் என்று கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.
தற்கால அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்தியது பொதுமக்களே என்பதும் அரசாங்கத்தை பாதுகாக்கும் பொறுப்பும் பொதுமக்களுக்கே உள்ளது என்றும் தெரிவித்தார்.
"உங்களுக்கு வீடு - நாட்டிற்கு எதிர்காலம்" தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 12,000 க்கும் மேற்பட்ட வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன என்றும் அதில் சுமார் 8000 வீடுகளில் மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
"உங்களுக்கு வீடு - நாட்டிற்கு எதிர்காலம்" தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கம்பஹா மாவட்டத்தில் கட்டான பிரதேச செயலகப் பிரிவில் கட்டப்பட்ட 4 புதிய வீடுகளை பொது மக்களுக்கு கையளிக்கும் வைபவத்தில் இன்று கலந்து கொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு உரையாற்றினார்.
கட்டான பிரதேச செயலகப் பிரிவில் கட்டான வடக்கு, கொண்டகஸ்முல்ல, கதிரான கீழ் மற்றும் கே.சி.டி சில்வாபுர பகுதிகளில் இந்த வீடுகள் திறக்கப்பட்டன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைப் பிரகடனத்திற்கு ஏற்ப, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அறிவிறுத்தலின் பேரில் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் "உங்களுக்கு வீடு - நாட்டிற்கு எதிர்காலம்" தேசிய வீடமைப்பு வேலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வேலைத் திட்டம் நாட்டில் உள்ள 14,022 கிராம சேவையாளர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாகும்.
இந்நிகழ்வில் கட்டான பிரதேச சபை உறுப்பினர் நாமல் சிறிவர்தன, கட்டான பிரதேச சபை உறுப்பினர் சரத் பிரேமதிலக, கட்டான பிரதேச சபை உறுப்பினர் ரத்னம் ரிய சில்வா, மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆனந்த ஹரிச்சந்திர மற்றும் கம்பஹா தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை முகாமையாளர் அனில் பிரியந்த, கட்டான கூட்டுறவு சங்கத் தலைவர் கவேஷ கல்பன உட்பட பிரதேச மக்கள் கலந்து கொண்டனர்.
முனீரா அபூபக்கர்
No comments:
Post a Comment