வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் கைவிடப்பட்ட நிலையில் இரு அரச பாடசாலைகள் - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 9, 2021

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் கைவிடப்பட்ட நிலையில் இரு அரச பாடசாலைகள்

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் பெருந்தொகை நிதியில் அமைக்கப்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டு பற்றைக் காடுகள் மண்டி காணப்படுகின்றன. 

கடந்த 1991ஆம் ஆண்டுக்குப் பின்னரான யுத்த சூழ்நிலைகளால் மூடப்பட்ட பாடசாலைகள் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் மக்கள் சொந்த இடங்களில் மீள்குடியேறியதையடுத்து இயங்க ஆரம்பித்தன.

இந்நிலையில் வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கோழிய குளம் பாடசாலை மற்றும் வாருடையார் இலுப்பைக் குளம் பாடசாலை என்பன சொந்த இடங்களில் இயங்கத் தொடங்கிய நிலையில் அவற்றுக்கான நிரந்தர வகுப்பறை கட்டடங்கள் மலசலகூட வசதிகள் குடிநீர் வசதிகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. 

மேற்படி பாடசாலைகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டமையால் தற்போது இந்த பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. 

பல மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலைகள் இவ்வாறான நிலையில் காணப்படுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

பரந்தன் குறூப் நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad