கொரோனா வைரஸுக்கு முந்திய நிலைக்கு திரும்பியது எண்ணெய் விலை - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 9, 2021

கொரோனா வைரஸுக்கு முந்திய நிலைக்கு திரும்பியது எண்ணெய் விலை

கடந்த ஆண்டு வரலாற்றில் பெரும் சரிவை சந்தித்த எண்ணெய் விலை கொரோனா பெருந்தொற்றுக்கு முந்திய நிலைக்கு மீண்டும் திரும்பியுள்ளது.

வழக்கத்தை விடவும் எண்ணெய் மீதான கேள்வி குறைவாக இருந்தபோதும், தடுப்பூசி உலகெங்கும் வழங்கப்பட்டு வரும் நிலையில் பொருளாதாரங்கள் மீட்சி பெற்று வேகமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார செயற்பாட்டின் அளவு கோலாக பார்க்கப்படும் எண்ணெய் விலை, வைரஸ் தொற்று காரணமாக தொடர்ந்தும் ஸ்திரமற்ற நிலையிலேயே காணப்படுகிறது.

எனினும் கடந்த ஒரு சில மாதங்களில் 50 வீதத்திற்கு மேல் உயர்வு கண்டு எண்ணெய் விலை பீப்பாய் ஒன்று 60 டொலர்களாக அதிகரித்துள்ளது.

எண்ணெய்க்கான பிரதான குறியீடான ப்ரெண்ட் மசகு எண்ணெய், அண்மைக் காலத்தில் வலுப்பெற்றுள்ளது. கடந்த நவம்பர் தொடக்கம் எதிர்கால விநியோகம் அடிப்படையிலான எதிர்கால ஒப்பந்தங்களின் விலை 59 வீதம் அதிகரித்துள்ளது.

அமெரிக்க எண்ணெய் விலை கடந்த ஓர் ஆண்டில் முதல் முறையாக பீப்பாய் ஒன்று 55 டொலர்களுக்கு மேல் அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment