டுபாயில் அமைந்துள்ள இலங்கை துணைத் தூதரகம் மார்ச் 05ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டுபாயில் உள்ள இலங்கை துணைத் தூதரக பொது அலுவலகத்தில் கடமையாற்றும் ஊழியர்களில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து, கடந்த திங்கட்கிழமை முதல் 24 ஆம் திகதி அதாவது நேற்று வரை தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்காலிகமாக மூடப்பட்டுள்ள காலத்தை எதிர்வரும் மார்ச் 5ஆம் திகதி வரை நீடிப்பதாக தூதரகம் விடுத்துள்ள அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
டுபாய் துணைத் தூதரக வளாகத்தை கிருமி நீக்கம் செய்த பின்னர், மீண்டும் அலுவலகம் பொதுமக்களுக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பபட்டுள்ளது.
அலுவலகம் மூடப்பட்டுள்ள காலத்தில் அவசர சேவைகளுக்கு, பின்வரும் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொலைபேசி எண்கள் – 04 398 6535, 04 355 2417
மின்னஞ்சல் முகவரி – slcg.dubai@mfa.gov.lk
No comments:
Post a Comment