''இலங்கையிடம் ஆக்கபூர்வமான பொறுப்புக் கூறலை எதிர்பார்க்க இயலாது'' - மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனிவா பணிப்பாளர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 24, 2021

''இலங்கையிடம் ஆக்கபூர்வமான பொறுப்புக் கூறலை எதிர்பார்க்க இயலாது'' - மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனிவா பணிப்பாளர்

(எம்.மனோசித்ரா)

மனித உரிமைகள் ஆணையகத்தின் அறிக்கையை 'பிரசார நடவடிக்கை' என குறிப்பிட்டு இலங்கை நிராகரித்துள்ளது. இறுதிப் போரில் இடம்பெற்றதாக கூறப்பட்ட போர் குற்றங்களுக்கும் பாரதூரமான மீறல்களுக்கும் நீதியை பெற்றுக் கொடுக்கவோ அல்லது பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதிலோ இலங்கைக்கு எவ்வித தேவையும் காணப்பட வில்லை என்பது தெளிவாகியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவின் உரையை சுட்டிக்காட்டி மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனிவாவிற்கான பணிப்பாளர் ஜோன் பிஷர் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள சர்வதேச குற்றங்களை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன மறுத்துள்ளார்.

இதுவரை காலமும் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளிலிருந்து அவர் பின்வாங்கியுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் அறிக்கையையை வெறும் 'பிரசார நடவடிக்கை' என குறிப்பிட்டுள்ளார்.

இவ்வானதொரு நிலைப்பாட்டை கொண்டுள்ள இலங்கையிடம் ஆக்கப்பூர்வமான பொறுப்புக் கூறலை எதிர்பார்க்க இயலாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment