ஒருவருக்கு கொரோனா தொற்று : முழு பேர்த் நகருமே முடக்கப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Monday, February 1, 2021

ஒருவருக்கு கொரோனா தொற்று : முழு பேர்த் நகருமே முடக்கப்பட்டது

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்நகரில் 5 நாள் முடக்கநிலை செயல்படுத்தப்பட்டுள்ளது.

கொவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அந்த நபர் தனிமைப்படுத்திக் கொள்வதற்காக ஒதுக்கப்பட்ட ஹோட்டல் ஒன்றில் பாதுகாவலராகப் பணிபுரிபவர். நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தபோது அவர் பல இடங்களுக்குச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஞாயிறு மாலை முதல் பேர்த் நகரைச் சேர்ந்த சுமார் 2 மில்லியன் பேர் தங்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும். உடற்பயிற்சி, மருத்துவ கவனிப்பு, அத்தியாவசிய வேலை, உணவு வாங்குவது ஆகியவற்றுக்கு மட்டுமே அவர்கள் வெளியே செல்லலாம் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அது தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 10 மாதங்களுக்குப் பின் பேர்த்தில் சமூக அளவில் ஒருவர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்று சமூக அளவில் மேலும் பரவுவதைத் தவிர்க்க, அதை விரைவாகவும் கடுமையாகவும் கையாள வேண்டும் என்று பேர்த்தின் முதலமைச்சர் மார்க் மெக்கொவன் கூறினார்.

No comments:

Post a Comment