பதவியை விட்டுக் கொடுத்தார் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் - இணைத் தலைவர்களாக பிமல், அதாவுட தெரிவு - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 16, 2021

பதவியை விட்டுக் கொடுத்தார் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் - இணைத் தலைவர்களாக பிமல், அதாவுட தெரிவு

பலஸ்தீனத்துடனான ஒருமைப்பாட்டுக்கான இலங்கைக் குழுவின் கூட்டம் கொழும்பில் அண்மையில் நடைபெற்றது. 

இதில் சமூக, அரசியல் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். இலங்கைக்கான பலஸ்தீன நாட்டு தூதுவரும் இதில் பங்கேற்றார்.

கடந்த 16 வருடங்களாக இதன் இணைத் தலைவராக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பார்க்கீர் மரிக்கார், தொடர்ந்தும் தாம் இதன் இணைத் தலைவராக செயற்படாது, அதனை ஒரு இளம் தலைவரிடம் ஒப்படைக்க விரும்புவதாகவும் பலஸ்தீனத்தீனத்திற்கான தமது ஆதரவு என்றும் போல முழு அர்ப்பணிப்புடன் தொடருமென குறிப்பிட்டு, தமது பதவியிலிருந்து ஒதுங்கிக் கொண்டார்.

இம்தியாஸ் எம்.பியை, இப்பதவிக்கு பிரேரித்தவர் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து புதிய நிர்வாகத் தெரிவு நடந்தது. இதில் சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களிலிருந்தும் பிரதிநிதிகள் உள்வாங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இணைத் தலைவர்களாக பிமல் ரத்னாயக்க மற்றும் அதாவுத செனவிரத்ன ஆகியோர் தெரிவானார்கள். பிரதி தலைவராக முஜீபுர் ரஹ்மான் தெரிவானார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad