தூக்கத்தில் மரணித்த இளைஞனின் உடலை கொரோனா என தகனம் செய்ய இடைக்கால தடை - இரண்டாவது பி.சி.ஆர் சோதனை குறித்து மேல்முறையீட்டு நீதிமன்று கவனம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 16, 2021

தூக்கத்தில் மரணித்த இளைஞனின் உடலை கொரோனா என தகனம் செய்ய இடைக்கால தடை - இரண்டாவது பி.சி.ஆர் சோதனை குறித்து மேல்முறையீட்டு நீதிமன்று கவனம்

கொரோனா தொற்றால் உயிரிழக்கும் ஒருவரின் உடலில் இரண்டாவது பி.சி.ஆர் பரிசோதனையை நடத்துவதற்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று பரிசீலிக்கப்பட்டது. சடலத்தை தகனம் செய்வதை ​​நிறுத்துமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவிட்டது.

தூக்கத்தில் உயிரிழந்த கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த 26 வயது பிசியோதெரபிஸ்ட் ஆன இர்சாத் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

இவர் ஜனவரி 31 இல் இறந்துள்ளதோடு இவருக்கு கொரோனா தொற்று எதுவும் இருக்கவில்லை என மனுதாரர் சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆனால் இறந்தவர் மீது முதலில் நடத்தப்பட்ட சோதனையில் அவர் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உடல் தகனம் செய்யப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. .

இதனை எதிர்த்து போடப்பட்ட மனுவில் முஸ்லிம்களின் நம்பிக்கை பிரகாரம் தகனம் செய்ய அனுமதிக்க முடியாது எனவும் அதன்படி பீசீஆர் சோதனையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த இரண்டாவது பி.சி.ஆர் பரிசோதனையைப் பெற அனுமதி கோரப்பட்டது. 

இறந்தவரின் பெற்றோர்கள் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, சாந்த ஜெயவர்தன மற்றும் ருஷ்டி ஹபீப் ஆகியோர் மனுதாரர்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஆஜரானார்கள்.

மனு இம்மாதம் நாளை புதன்கிழமை, 17 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளதோடு அன்றைய தினம் சட்ட வைத்திய அதிகாரி களுபோவில ஆஸ்பத்திரி பணிப்பாளர் ஆகியோரை ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. 

அன்றைய தினம் வரை சடலத்தை தகனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் கூறினார்.

No comments:

Post a Comment