ஜெனிவா விவகாரத்தில் இருந்து தம்மை பாதுகாக்க அரசாங்கம் இஸ்லாமிய நாடுகளின் உதவியை கோருகிறது - மனோ கனேஷன் - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 23, 2021

ஜெனிவா விவகாரத்தில் இருந்து தம்மை பாதுகாக்க அரசாங்கம் இஸ்லாமிய நாடுகளின் உதவியை கோருகிறது - மனோ கனேஷன்

பௌத்த கொள்கைக்கு அமைய செயற்படுகிறோம் என்று குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் பௌத்த கொள்கைக்கு முற்றிலும் முரணாக செயற்படுகிறது என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கனேஷன் தெரிவித்தார்.

கொவிட் - 19 தொற்றுக் காரணமாக மரணிக்கின்ற ஜனாஸாக்களை பலவந்தமாக எரிக்கின்ற விடயத்தை எதிர்த்து நேற்று செவ்வாய்கிழமை (23) தேசிய அமைப்புக்களினால் ஒழுங்குசெய்யப்பட்ட அமைதிப் போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் தெரிவித்ததாவது, இனவாதத்தை முன்னிலைப்படுத்தி செயற்படும் நாடுகள் நெடுகாலம் ஆட்சியில் இருந்ததாக சரித்திரம் இல்லை. கடும்போக்கில் செயற்பட்ட அரசாங்கத்தின் நிலையினை தற்போதைய அரசாங்கம் மீட்டிப்பார்க்க வேண்டும்.

வெளிவிவகார கொள்கையிலும், தேசிய நல்லிணக்க விவகாரத்திலும் ராஜபக்ஷர்களின் ஆட்சி தோல்வியடைந்துள்ளது. ஜெனிவா விவகாரத்தில் இருந்து தம்மை பாதுகாக்க அரசாங்கம் இஸ்லாமிய நாடுகளின் உதவியை கோருகிறது. 

மறுபுறம் இலங்கை வாழ் முஸ்லிம் மக்களின் உரிமைகளை திட்டமிட்டு முடக்குகிறது. தமிழ் மக்கள் தமது உரிமைகளை பாதுகாத்துக் கொள்ள ஒன்றினைந்து செயற்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad