மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் எழுந்தமானமாக அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அதற்கிணங்க நேற்று முதல் அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த செயற்திட்டத்தில் முதற்கட்டமாக நேற்றைய தினம் ராஜகிரி ஜனாதிபதி வித்தியாலயத்தில் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எழுந்தமானமாக தொடர்ந்தும் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை முழுமையாக திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் தினந்தோறும் மூன்று பாடசாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 30 மாணவர்களுக்கு அண்ரிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
அப்போது பாடசாலை மட்டத்தில் எந்தளவு வைரஸ் தொற்று பரவியுள்ளது என்பதை எளிதில் அறிந்து கொள்ள முடியும்.
அத்துடன் சாதாரணமாக மாணவர்களின் உஷ்ண நிலை மற்றும் அவர்களிடையே காணப்படும் இரத்த அழுத்தம் உள்ளிட்ட ஏனைய நோய்கள் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ளவும் எதிர்பார்ப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment