மடுல்சீமை சிறிய உலக முடிவுக்கு செல்வோர் அவதானம் - News View

Breaking

Post Top Ad

Thursday, February 11, 2021

மடுல்சீமை சிறிய உலக முடிவுக்கு செல்வோர் அவதானம்

மடுல்சீமை பிரதேசத்தில் காணப்படும் சிறிய உலக முடிவை பார்வையிட வரும் உல்லாச பிரயாணிகளை மிகுந்த அவதானத்துடன் நடந்து கொள்ளுமாறு மடுல்சீமை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், மடுல்சீமை பகுதியில் தற்போதைய காலங்களில் மிகவும் மழையுடன் கூடிய பனிமூட்டமான காலநிலை நிலவுகின்றது. இதன் காரணமாக சிறிய உலக முடிவுப்பகுதியின் பாதைகளில் பயணிக்கும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அவர் மேலும் தெரிவித்தார். 

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக இப்பகுதியில் சுற்றுலா மேற்கொண்ட தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றும் ஒருவர் கால் தவறி சிறிய உலக முடிவின் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

மடுல்சீமை பிரதேசத்திலுள்ள சிறிய உலக முடிவைப் பார்வையிட சென்ற 12 பேர் அடங்கிய குழுவில் ஒருவர் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். 

இவ்வாறு காணாமல் போன ஊடகவியலாளர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரியும் மக்கொன - களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய தினுர விஜேசுந்தர என்பவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடும் மழையுடன் பனி படர்ந்திருந்த நேரத்தில் முகாம் அமைத்து தங்கியிருந்த நிலையில், கடும் குளிர் காரணமாக இளைஞர் வாகனத்துக்குச் சென்றபோதே, காணாமல் போயுள்ளார். இதனையடுத்து சிறிய உலக முடிவின் பள்ளதாக்கிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

மடுல்சீமை நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad