ஏறாவூர் நகர சபையின் புதிய தவிசாளர் நழீம் இற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் - ஒரு நீதியான, தகுதியான, உண்மையான ஜனநாயகத்தின் வெற்றி இது : அலி ஸாஹிர் மௌலானா - News View

Breaking

Post Top Ad

Thursday, February 11, 2021

ஏறாவூர் நகர சபையின் புதிய தவிசாளர் நழீம் இற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் - ஒரு நீதியான, தகுதியான, உண்மையான ஜனநாயகத்தின் வெற்றி இது : அலி ஸாஹிர் மௌலானா

ஏறாவூர் நகர சபையின் புதிய தவிசாளராக இன்றைய தினம் தெரிவாகி உள்ள நழீம் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களை சமர்ப்பணம் செய்வதுடன், அவருக்கு ஆதரவளித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் உள்ளம் கனிந்த நன்றிகளையும் தெரிவிப்பதுடன் இறுதி வரை எதற்கும் சோரம் போகாமல் ஒற்றுமையுடன் செயலாற்றிய அனைவரதும் முன்னேற்றத்திற்காக என் பிரார்த்தனைகளையும் சமர்ப்பணம் செய்கிறேன் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.

இறைவனை முதலில் புகழ்ந்தவனாக இன்றைய தினம் தவிசாளர் நழீம் இனால் பெற்றுக் கொள்ளப்பட்ட வெற்றியானது ஒரு நீதியான, உண்மையான மற்றும் தகுதியான ஒருவருக்கு ஒற்றுமையான பயணத்தின் ஊடாக கிடைக்கப் பெற்ற ஒரு வெற்றியாகும். அத்துடன் அவரது நற்குணங்களுக்கும், பொறுமைக்கும் சகிப்புத் தன்மைக்குமான பரிசாகவும் இது அமைகிறது.

இதற்காக தவிசாளர் நழீம் அவர்களை உளமாற வாழ்த்துவதுடன், சர்வ வல்லமை பொருந்திய இறைவனது ஆசிர்வாதமும் அன்பும் என்றென்றும் கிடைக்க வேண்டும் எனவும் பிரார்த்திக்கிறேன்.

அத்துடன் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டு இன்று புதிய தவிசாளருக்கான வாக்கெடுப்பு இடம்பெறும் வரை பல்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாக இருந்த போதும் கொள்கையில் ஒற்றுமைப்பட்டவர்களாக எந்தவித பேரம் பேசல்களுக்கும், அழுத்தங்களுக்கும் அடிபணியாது இறுதிவரை இந்தத் தேர்தலில் தங்கள் ஆதரவை வழங்கிய ஏறாவூர் நகர சபையினது உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதுடன், உங்கள் அனைவரது எண்ணங்களும் நிறைவேறி மக்களது எதிர்பார்ப்புகளை நிறைவாக பூர்த்திசெய்தவர்களாக உங்கள் அனைவரதும் முன்னேற்றத்திற்காக உளமாற பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு ஏறாவூர் நகர சபையின் புதிய தவிசாளராக தெரிவாகிய நழீம் ஹாஜியார் மற்றும் உறுப்பினர்களுக்கான வாழ்த்துச் செய்தியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad