சர்ச்சைக்குரிய கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு முனையங்கள் தொடர்பில் அமைச்சரவை இறுதி முடிவொன்றை எட்டியுள்ளது.
நேற்று (01) ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை அமைச்சர்களின் கூட்டத்தில், துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன சமர்ப்பித்த அமைச்சரவை யோசனைக்கு அமைய அதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய, பின்வரும் முக்கிய தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை முற்றுமுழுதாக (100%), இலங்கை துறைமுக அதிகார சபையின் உரிமை கொண்ட முனையமாக முன்னெடுத்துச் செல்லல்.
கொழும்பு மேற்கு கொள்கலன் முனையத்தை இந்தியா, ஜப்பான் நாடுகளால் பரிந்துரைக்கப்படும் பங்காளர்களுடன் துறைமுக அதிகார சபை இணைந்து, 35 வருடங்களில் மீளக் கையளிக்கும் வகையில், அபிவிருத்தி செய்தல்.
No comments:
Post a Comment