கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த சுகாதார அமைச்சர் குணமடைந்து வீடு திரும்பினார் - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 16, 2021

கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த சுகாதார அமைச்சர் குணமடைந்து வீடு திரும்பினார்

கொவிட்-19 தொற்றுக்குள்ளான நிலையில், IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு கடந்த ஜனவரி 23ஆம் திகதி உறுதிப்படுத்தியிருந்தது.

கொரோனா தொற்றுக்குள்ளான சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி, ஹிக்கடுவவில் உள்ள சிகிச்சை நிலையமொன்றில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவரது உடல் நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, அங்கொடை IDH (தேசிய தொற்றுநோய் வைத்தியசாலை) வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்த அவர், படிப்படியாக குணமடைந்து இன்றையதினம் வீடு திரும்பியுள்ளார்.

அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி நிகழ்வொன்றின்போது, ஆயுர்வேத வைத்தியர் என தம்மை அடையாளப்படுத்தி வரும் கேகாலையைச் சேர்ந்த, தம்மிக பண்டார தயாரித்த, கொரோன வைரஸுக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தியை கொண்ட பாணியை அருந்தியிருந்த போதிலும் அது பலனளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி பணிக்கு திரும்பும் வரை, அவரது இடத்திற்கு, பேராசிரியர் சன்ன ஜயசுமண பதில் சுகாதார அமைச்சராக இன்று (16) ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad