பவித்ராவின் இடத்திற்கு பதில் சுகாதார அமைச்சராக பேராசிரியர் சன்ன ஜயசுமண - ரொஷான் ரணசிங்கவுக்கு புதிய இராஜாங்க அமைச்சு - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 16, 2021

பவித்ராவின் இடத்திற்கு பதில் சுகாதார அமைச்சராக பேராசிரியர் சன்ன ஜயசுமண - ரொஷான் ரணசிங்கவுக்கு புதிய இராஜாங்க அமைச்சு

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியின் இடத்திற்கு, பதில் சுகாதார அமைச்சராக, பேராசிரியர் சன்ன ஜயசுமண பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்

சுகாதார அமைச்சர் பணிக்கு திரும்பும் வரை குறித்த பதவியில் அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இன்றையதினம (16) முற்பகல், ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்னிலையில் அவர் இவ்வாறு பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் சன்ன ஜயசுமண, ஒளடத உற்பத்திகள்‌, வழங்குகைள்‌ மற்றும்‌ ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சராக பதவி வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க, இன்றையதினம் (16) ஜனாதிபதி முன்னிலையில், மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

அவர் இதற்கு முன்னர், காணி முகாமைத்துவ அலுவல்கள்‌ மற்றும்‌ அரச தொழில் முயற்சி, காணிகள்‌ மற்றும்‌ சொத்துக்கள்‌ அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad