உலக வர்த்தக அமைப்பின் முதல் பெண் தலைவரானார் நைஜீரியாவின் முன்னாள் நிதி அமைச்சர் - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 16, 2021

உலக வர்த்தக அமைப்பின் முதல் பெண் தலைவரானார் நைஜீரியாவின் முன்னாள் நிதி அமைச்சர்

உலக வர்த்தக அமைப்பின் (WTO) முதல் பெண் தலைவராக நைஜீரியாவில் இரண்டு முறை முன்னாள் நிதியமைச்சராக இருந்த என்கோச்சி ஒகோன்ஜோ-இவெலா (66) நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், உலக வர்த்தக அமைப்பின் ஏழாவது புதிய தலைவராக மட்டுமல்லாமல் முதல் பெண் தலைவர் மற்றும் முதல் ஆபிரிக்க தலைவர் என்ற பெருமையை ஒகோன்ஜோ-இவெலா பெற்றுள்ளார்.

164 உறுப்பு நாடுகளைக் கொண்ட உலகின் முதன்மையான வா்த்தக அமைப்பான WTO, நாடுகளுக்கு இடையிலான வா்த்தகம் தொடர்பான விதிமுறைகளை தீர்மானிக்கிறது.

இவெலாவின் பதவிக் காலம் மார்ச் முதலாம் திகதி தொடங்கி 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடையும்.

இரண்டு முறை நைஜீரியாவின் நிதி அமைச்சராக இருந்த என்கோசி ஒகோன்ஜோ-இவெலா திங்களன்று உலக வர்த்தக அமைப்பின் அடுத்த இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.

நாடுகளுக்கு இடையிலான வர்த்தக விதிகளை நிர்வகிக்கும் முதல் ஆபிரிக்க மற்றும் முதல் பெண் இவராவார்.

"இது உலக வர்த்தக அமைப்பிற்கு மிகவும் முக்கியமான தருணம்" என உலக வர்த்தக அமைப்பின் பொதுக்குழுத் தலைவர் டேவிட் வாக்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஒகோன்ஜோ-இவெலா, அமைப்பை வழிநடத்த தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு கௌரவிப்பதாகவும், கொரோனா வைரஸ் தொற்று நோயால் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார மற்றும் சுகாதார சவால்களை ஏற்றுக் கொள்வதாகவும் உறுதியளித்தார்.

"கொவிட்-19 தொற்று நோயால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து நாம் முழுமையாகவும் விரைவாகவும் மீட்க வேண்டுமென்றால் ஒரு வலுவான உலக வர்த்தக அமைப்பு மிக முக்கியமானது.

உலகப் பொருளாதாரம் மீண்டும் செல்ல எங்களுக்குத் தேவையான கொள்கை பதில்களை வடிவமைத்து செயல்படுத்த உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்பார்க்கிறேன்," என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவி வகித்தபோது, இவெலாவின் நியமனத்திற்கு இடையூறாக இருந்தார் எனவும் ஜோ பைடன் பதவியேற்றதை அடுத்து இவெலாவுக்கு இருந்த தடை நீங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது. அவரது நியமனத்திற்கு பைடன் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad