ஒரு மில்லியன் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டதன் பின்னரே நான் பெற்றுக் கொள்வேன் - ஹரீன் பெர்னாண்டோ - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 16, 2021

ஒரு மில்லியன் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டதன் பின்னரே நான் பெற்றுக் கொள்வேன் - ஹரீன் பெர்னாண்டோ

(நா.தனுஜா)

நாடளாவிய ரீதியில் குறைந்தபட்சம் சுமார் ஒரு மில்லியன் பேருக்கு கொவிட்-19 தடுப்பூசி ஏற்றப்பட்டதன் பின்னரே நான் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வேன் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்திருக்கிறார்.

நாடளாவிய ரீதியில் தற்போது கொவிட்-19 தடுப்பூசி ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே ஹரீன் பெர்னாண்டோ மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்.

அப்பதிவில், கொவிட்-19 தடுப்பூசியை இப்போது பெற்றுக் கொள்வதில்லை எனத் தீர்மானித்திருக்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கும் ஹரீன், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னிலையில் நின்று போராடும் ஊழியர்கள் மற்றும் இலகுவில் நோய்த் தொற்று ஏற்படக் கூடிய தரப்பினருக்கே முதலில் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மேலும் 'நாடளாவிய ரீதியில் குறைந்தபட்சம் சுமார் ஒரு மில்லியன் பொதுமக்களுக்குத் தடுப்பூசி ஏற்றப்பட்டதன் பின்னரே நான் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வேன்' என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment