பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வருகையானது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும். அத்தோடு இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் பரஸ்பர கூட்டு முயற்சிகளுக்கும் இந்த விஜயம் வழிவகுக்கும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்துள்ள பதிவொன்றில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில் மேலும், 'இலங்கை வரவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவருடன் விஜயம் செய்யும் குழுவினரையும் வரவேற்க எதிர்பார்த்துள்ளோம்.
பாகிஸ்தான் பிரதமரின் இந்த விஜயமானது, இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும். அத்தோடு இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் பரஸ்பர கூட்டு முயற்சிகளுக்கும் வழிவகுக்கும் என்று குறிப்பிட்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இம்முறை ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள இஸ்லாமிய நாடுகளின் ஆதரவை இலங்கை பெற்றுக் கொள்ள இந்த விஜயம் முக்கியமானதாக கருதப்படுகின்றது.
குறிப்பாக ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான புதியதொரு தீர்மானம் முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் அதனை எதிர்க்கும் வகையிலும் இலங்கையை ஆதரிக்கும் வகையிலும் நட்பு நாடுகளுடன் இலங்கை தற்போது கலந்துரையாடி வருகின்றது.
மனித உரிமைகள் பேரவையின் சிறப்பு அந்தஸ்துள்ள நாடு என்ற வகையில் பாகிஸ்தானின் ஒத்துழைப்புகள் இலங்கைக்கு பெரிதும் பயன்தரும் என பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயம் குறித்து குறிப்பிடப்படுகின்றது.
No comments:
Post a Comment