மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தைப் பெற்றுக் கொடுக்க முடியாவிட்டால் அரசாங்கத்தில் இருந்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வெளியேற வேண்டும் என்ற கருத்து பிற்போக்குத் தனமானது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியின்படி ஆயிரம் ரூபாவை பெற்றுக் கொடுக்காத பட்சத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், நல்லாட்சி அரசாங்கம் மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. அவை அனைத்தும் நிறைவேற்றப்படவில்லை. அப்போது நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்த தமிழ் முற்போக்குக் கூட்டணி வெளியேறியதா, என்பதைக் கேட்கவிரும்புகிறேன்.
தற்போது ஆயிரம் ரூபாவைத் தோட்டத் தொழிலாளர்களுக்குப் பெற்றுக் கொடுக்கும் பெரும் முயற்சியில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளது என்றார்.
தினகரன்
No comments:
Post a Comment