ஸ்பெயினின் கட்டலோனிய பிராந்தியத்தில் பிரிவினைவாதிகள் பெரு வெற்றி - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 16, 2021

ஸ்பெயினின் கட்டலோனிய பிராந்தியத்தில் பிரிவினைவாதிகள் பெரு வெற்றி

ஸ்பெயினில் பகுதி சுயாட்சி கொண்ட கட்டலோனிய பிராந்தியத்தில் நடைபெற்ற உள்ளூர் சட்ட மன்றத் தேர்தலில் பிரிவினைவாதக் கட்சிகள் தமது பெரும்பான்மையை அதிகரித்துக் கொண்டுள்ளன.

90 வீதமான வாக்குகள் எண்ணப்பட்டிருக்கும் நிலையில் 135 ஆசனங்கள் கொண்ட சட்ட மன்றத்தில் 74 இடங்களை மூன்று பிரிவினைவாதக் கட்சிகள் கைப்பற்றியுள்ளன. முந்தைய சட்ட மன்றத்தில் இந்தக் கட்சிகள் 70 ஆசனங்களையே பெற்றிருந்தன.

பிரதான விவகாரங்கள் குறித்து இந்த கட்சிகளிடையே பிளவு இருந்த போதும் அவர்கள் ஆட்சியை கைப்பற்ற இது வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பார்சிலோனா நகரைக் கொண்ட கட்டலோனியா பிராந்தியம், 7.5 மில்லியன் மக்கள் வாழும் ஸ்பெயினின் செல்வாக்கு மிக்க பிராந்தியமாகும்.

இந்தப் பிராந்தியம் ஸ்பெயினில் இருந்து சுதந்திரம் பெறும் முயற்சியில் ஈடுபட்டது. கடந்த 2017 இல் பெரும் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியது. 

அந்த முயற்சி தோல்வி அடைந்த நிலையில் மத்திய அரசினால் பிராந்தியத்தில் சுயாட்சி அந்தஸ்து சுமார் ஏழு மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டது.

No comments:

Post a Comment