நடுநிலை பேணும் மனநிலையில் செயற்பட்ட முன்னாள் சபாநாயகருக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! - News View

Breaking

Post Top Ad

Monday, February 15, 2021

நடுநிலை பேணும் மனநிலையில் செயற்பட்ட முன்னாள் சபாநாயகருக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!

நடுநிலை பேணும் சிறந்த சபாநாயகராகத் திகழ்ந்து, அரசியலில் தடம் பதித்த மக்கள் தலைவன் அமரர் வி.ஜே.மு. லொகுபண்டார என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 18வது சபாநாயகரான லொகுபண்டாரவின் மறைவு குறித்து அவர் வௌியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது, “அரசியலில் 1977 ஆம் ஆண்டு காலடி வைத்த அமரர் லொகுபண்டார ஒரு முன்னணி அரசியல்வாதி. 

அமைச்சராக மட்டுமன்றி 2004 முதல் 2010 வரை சபாநாயகராகவும் இவர் பணியாற்றியவர். சபாநாயகர் பதவி ஆளுங்கட்சிக்கே உரித்தென்ற சம்பிரதாய அரசியலில், எதிர்க்கட்சியிலிருந்தே இவர் சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டார். இந்தத் தெரிவு இவரது அரசியலைப் பெருமைப்படுத்தியது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் அரசாங்கத்தில் சபாநாயகராகப் பணியாற்றி, நடுநிலை பேணிச் செயற்பட்டவர். மேலும் 2010 முதல் 2015 வரை சப்ரகமுவ ஆளுநராகச் செயற்பட்டதால், மக்கள் பணிக்கே உரித்தான முன்னுதாரண தலைவராகவும் இவர் திகழ்கிறார்.

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா, அமரர் லொகுபண்டாரவையும் விட்டுவைக்கவில்லை. அந்நாரின் இழப்பால் துயருறும் குடும்பத்தினர், உறவினர், ஆதரவாளர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்”. என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad